ஜம்மு-காஷ்மீரில் 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

ஜம்மு-காஷ்மீரில் 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஜம்மு-காஷ்மீரில் 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ரஜோரி காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது, தஸ்சல் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டுச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம்.

அப்போது மேம்படுத்தப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

பின்னர் அதனை கைப்பற்றி பாதுகாப்பாக அழித்தோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ரஜோரி காவல்துறையினர் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக ஜம்முவின் நா்வால் பகுதியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் சனிக்கிழமை காலை 15 நிமிஷங்கள் இடைவெளியில் இரட்டைக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் முதல் குண்டுவெடிப்பில் 5 போ் காயமடைந்த நிலையில் இரண்டாம் குண்டுவெடிப்பில் மேலும் 4 போ் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com