'பதான்' ரிலீஸ் குறித்து ஷாருக்கானிடம் பேசியது என்ன? அசாம் முதல்வர் விளக்கம்

''பதான்'' வெளியீடு குறித்து பேச வேண்டும் என ஷாருக்கான்தான் முதலில் குறுஞ்செய்தி அனுப்பியதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விளக்கம் அளித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


''பதான்'' வெளியீடு குறித்து பேச வேண்டும் என ஷாருக் கான்தான் முதலில் குறுஞ்செய்தி அனுப்பியதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

அவர் மாலை 7.40 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பணிகளை எல்லாம் முடித்துவிட்டு அதிகாலை 2 மணிக்கு ஷாருக்கானுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் குறிப்பிட்டார். 

ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்து ஷாருக்கானுடன் நடனமாடும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

இதற்கு ஹிந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'பதான்' திரைப்படத்தை வெளியிடக் கூடாது என பாஜக தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், திரைப்பட வெளியீட்டையொட்டி அசாம் முதல்வருடன் நடிகர் ஷாருக்கான் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நேற்று பேசினார். இந்நிலையில் ஷாருக்கானுடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விளக்கமளித்துள்ளார். 

அவர் பேசியதாவது, ஷாருக்கான் குறுஞ்செய்தி மூலம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னுடன் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். என்னுடன் பேச விரும்புவதாக தொடர்ந்து பல குறுஞ்செய்திகள் அனுப்பினார். அதனால் என்னுடைய பணிகளை முடித்துக்கொண்டு 
அதிகாலை 2 மணியளவில் ஷாருக்கானை தொடர்புகொண்டு பேசினேன். 

தனது திரைப்படம் வெளியாவதையொட்டி எந்தப் பிரச்னைகளும் எழாமல் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். என்ன படம் என்று கேட்டேன். 'பதான்' என்று திரைப்படத்தின் பெயரைச் சொன்னார். உங்கள் திரைப்படம் வெளியாவதால், எந்த பிரச்னைகளும் எழாது என்று உறுதியளித்தேன். 

எனக்கு திரைப்படங்களில் அதிக ஆர்வமில்லை. எனது இளைமைப் பருவத்தில் இருந்த நடிகர்களைத்தான் எனக்குத் தெரியும். ஷாருக் கான் யார் எனத் தெரியாது. எங்களுடைய தொலைப்பேசி உரையாடல் இணையத்தில் வைரலானதை அறிந்தேன். எண்ணற்ற 'பதான்'கள் வரும், போகும். கவனம் செலுத்த வேண்டிய பல பிரச்னைகள் மாநிலத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com