கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கினார் பரோலில் வந்த தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம்

தனக்கு பரோல் கிடைத்த மகிழ்ச்சியை அவர் கேக் வெட்டிக் கொண்டாடினார். அதில்தான் சிக்கல் எழுந்துள்ளது.
கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கினார் பரோலில் வந்த தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம்
கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கினார் பரோலில் வந்த தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம்

சண்டீகர் : தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம் சிங், 40 நாள்கள் பரோலில் சனிக்கிழமை வெளியே வந்தார். தனக்கு பரோல் கிடைத்த மகிழ்ச்சியை அவர் கேக் வெட்டிக் கொண்டாடினார். அதில்தான் சிக்கல் எழுந்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ராம் ரஹீம், மிக நீண்ட வாளைக் கொண்டு கேக் வெட்டியுள்ளார்.

தனது ஆதரவாளர்கள், ஹரியாணா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தூய்மை விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பாஜக தலைவர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

தனது இரண்டு பெண் தொண்டர்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, ராம் ரஹீம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே 40 நாள்கள் பரோலில் வெளியே வந்த அவர், உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பர்னாவா ஆசிரமத்துக்கு வந்தார்.

இந்த பரோல் குறித்து ஹரியாணா முதல்வர் எம்.எல். கட்டார் கூறுகையில், பரோலுக்கு விண்ணப்பிப்பது அனைத்து சிறைவாசிகளுக்கும் உள்ள உரிமை. இதில் அரசு எதையும் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com