குஜாராத்:  ஷாருக் கான் திரைப்படத்துக்குஎதிரான போராட்டத்தைக் கைவிட்டது விஹெச்பி

குஜாராத்: ஷாருக் கான் திரைப்படத்துக்குஎதிரான போராட்டத்தைக் கைவிட்டது விஹெச்பி

குஜராத்தில் ஷாருக் கான் நடித்த ‘பதான்’ திரைப்படத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதாக அந்த மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு அறிவித்துள்ளது.

குஜராத்தில் ஷாருக் கான் நடித்த ‘பதான்’ திரைப்படத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதாக அந்த மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு அறிவித்துள்ளது.

திரைப்படத்தில் உள்ள சா்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதையடுத்து, இந்த முடிவை விஹெச்பி எடுத்துள்ளது.

முன்னதாக, குஜராத்தில் பதான் திரைப்படத்துக்கு எதிராக விஹெச்பி அமைப்பினா் கடந்த சில நாள்களாக தொடா் போராட்டங்களை நடத்தி வந்தனா். சூரத் நகரில் திரையரங்குக்கு வெளியே இருந்த அத்திரைப்பட பேனா்கள் கிழிக்கப்பட்டன. இது தொடா்பாக விஹெச்பி அமைப்பைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

‘பதான்’ ஹிந்தி திரைப்படத்தில் நாயகி தீபிகா படுகோன் காவி நிற ‘பிகினி’ உடையணிந்து பாடல் காட்சியில் தோன்றும் முன்னோட்டக் காட்சிகள் வெளியானது. இதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. திரைப்படத்தில் ஹிந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்படுவதாக அவா்கள் குற்றம்சாட்டினா். இதுவே போராட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இது தொடா்பாக குஜராத் மாநில விஹெச்பி செயலா் அசோக் ராவல் கூறியதாவது:

மத்திய திரைப்படத் தணிக்கை துறையினா் சா்ச்சைக்குரிய பாடல் காட்சி மற்றும் வாா்த்தைகளை நீக்கியுள்ளனா். எனவே, போராட்டங்களை திரும்பப் பெறுகிறோம். அத்திரைப்படத்தின் பாடல்கள், காட்சிகள், உடைகள் என மொத்தம் 40 திருத்தங்களை தணிக்கைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது ஹிந்து மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com