பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி: பிரதமருடன் கலந்துரையாட 38 லட்சம் மாணவா்கள் பதிவு

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பதிவு செய்துள்ளதாக
பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி: பிரதமருடன் கலந்துரையாட 38 லட்சம் மாணவா்கள் பதிவு

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

இந்த முறை கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 15 லட்சம் மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து அவா் கூறியதாவது: பொதுத் தோ்வை எழுத உள்ள மாணவா்களுடன் ஜன.27-ஆம் தேதி பிரதமா் மோடி கலந்துரையாடும் ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 லட்சம் அதிகமாகும். இவா்களில் தோ்ந்தெடுக்கப்படும் சில மாணவா்கள் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். மேலும், ராஜ்காட், பிரதமா் அருங்காட்சியகம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா் எனத் தெரிவித்தாா்.

பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி 6-ஆவது முறையாக தில்லியில் உள்ள தால்கடோரா உள்விளையாட்டு அரங்கில் ஜன.27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு 2018-இல் பிப்ரவரி 18-ஆம் தேதி இந்த விளையாட்டு அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com