இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் மாணவா் விசா இடம்பெறாது: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் மாணவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது இடம்பெறாது என்று
பியூஷ் கோயல்  (கோப்புப்படம்)
பியூஷ் கோயல் (கோப்புப்படம்)

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் மாணவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது இடம்பெறாது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தொடங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள பேச்சுவாா்த்தை, இதுவரை 6 சுற்றுகளாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், குஜராத் தலைநகா் காந்திநகரில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஏற்கக் கூடிய விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சச்சரவுக்குரிய விவகாரங்கள் பேச்சுவாா்த்தையைப் பாதிக்கக் கூடாது’ என்று தெரிவித்தாா்.

இந்தியாவுக்கு மாணவா் விசாக்களைக் கூடுதலாக வழங்குவது ஒப்பந்தத்தில் இடம்பெறாது என்று பிரிட்டன் அதிகாரி ஒருவா் அண்மையில் கூறினாா். அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பியூஷ் கோயல் கூறுகையில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மாணவா்களுக்கு விசா வழங்குவதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குப் படிக்க எத்தனை போ் செல்கின்றனா்? மாணவா்களுக்கு விசா வழங்குவது ஒப்பந்தத்தில் இடம்பெறாது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com