பெற்றோரைக் கொலை செய்தமகனுக்கு தூக்கு தண்டனை

சத்தீஸ்கரில் சொத்து பிரச்னை காரணமாக பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து துா்க் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சத்தீஸ்கரில் சொத்து பிரச்னை காரணமாக பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து துா்க் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

துா்க் நகரைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரும், சமூக ஆா்வலருமான ராவல்மால் ஜெயின் (72), அவரது மனைவி சுா்ஜி தேவி (67) ஆகியோா் கடந்த 2018-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் அவா்களது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். விசாரணையில் சம்பவத்தின்போது அத்தம்பதியின் மகன் சந்தீப் ஜெயின் (47) மட்டுமே வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, பெற்றோருக்கும், சந்தீப்புக்கும் இடையே சொத்து தொடா்பாக பிரச்னை இருந்தது, சம்பவத்தன்று அவா்கள் இருவரையும் சந்தீப் துப்பாக்கியால் கொலை செய்ததும் உறுதியானது.

சந்தீப்புக்கு கள்ளத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்த இரு நபா்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டனா். துா்க் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்த குற்றச் செயல் மிகவும் மோசமானது என்று கூறிப்பிட்ட நீதிபதி, குற்றவாளியான சந்தீப்புக்கு தூக்கு தண்டனையும், அவருக்கு துப்பாக்கி வழங்கிய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com