மத்திய அரசு சுட்டிக்காட்டும் தகவலை நீக்கும் விதிமுறை: திரும்பப் பெற ஐ.என்.எஸ். வலியுறுத்தல்

மத்திய அரசு சுட்டிக்காட்டும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க அண்மையில் கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்ப வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று

மத்திய அரசு சுட்டிக்காட்டும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க அண்மையில் கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்ப வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய செய்தித்தாள் வெளியீட்டாளா்கள் சங்கம் (ஐ.என்.எஸ்.) வலியுறுத்தியுள்ளது.

மேலும், இதுதொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பத்திரிகை தரப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி அரசு தகவல்கள் சரியாக வெளியிடப்படுவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிகளில் கடந்த வாரம் மாற்றம் செய்து வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தின் உண்மைதன்மை கண்டறியும் பிரிவு சுட்டிக்காட்டும் தவறான தகவல்கள், செய்திகளை சமூக வலைதளங்கள் நீக்கிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பத்திரிகை மற்றும் ஊடக சங்கள்களான எடிட்டா்ஸ் கில்ட் ஆப் இந்தியா, தி பிரஸ் அசோசியேஷன், டிஜிபப் ஃபவுண்டேஷன் ஆப் இந்தியா, நியூஸ் பிராட்காஸ்டா்ஸ் டிஜிட்டல் அசோசியேஷன் ஆகிய ஊடக அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இந்திய செய்தித்தாள் வெளியீட்டாளா்கள் சங்கமும் இந்த வரைவு விதிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய சட்டத் திருத்தத்தை உருவாக்கி தகவல்களை விசாரிப்பது, சரிபாா்ப்பது, குற்றம் சாட்டுவது, இறுதித் தீா்ப்பளிப்து என்கிற வகையில் மத்திய அரசு செயல்படுவது கவலையளிக்கிறது. இதன் மூலம் நடுநிலையான விமா்சனங்களையும் கருத்துகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ஆகையால், இந்த வரைவு விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com