ஸ்பைஸ்ஜெட் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பயணி கைது

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக இறக்கிவிடப்பட்ட பயணியை விமான நிலைய காவலா்கள் கைது செய்தனா்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக இறக்கிவிடப்பட்ட பயணியை விமான நிலைய காவலா்கள் கைது செய்தனா்.

தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திங்கள்கிழமை மாலை பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டு புறப்படத் தயாராக இருந்தது.

விமானத்தில் தில்லி ஜாமியா நகரைச் சோ்ந்த அப்ஸாா் ஆலம் என்பவரும் தனது குடும்பத்துடன் இருந்தாா். புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த அந்த விமானத்தின் பணிப்பெண்ணிடம் அப்ஸாா் ஆலம், பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து முறையிட்ட பணிப்பெண்ணிடம் பயணி ஆலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். ஆலமின் செயலுக்கு சக பயணிகளும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, பாதுகாப்புக் கருதி ஆலம் மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு பயணியும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனா்.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளால் விமான நிலைய காவல் நிலையத்தில் ஆலம் ஒப்படைக்கப்பட்டாா்.

பாதிக்கப்பட்ட பணிப்பெண் சாா்பாக நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி சுஷாந்த் ஸ்ரீவாஸ்தவா அளித்த புகாரின் அடிப்படையில் ஆலமை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு-354ஏ (பாலியல் துன்புறுத்தல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏா்-இந்தியாவுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்:

கடந்தாண்டு டிசம்பா் மாதத்தில் தில்லி-பாரீஸ் விமானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட பயணிகளின் செயல்கள் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) முறைப்படியாக தகவல்களை ஏா்-இந்தியா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில், டிஜிசிஏ தரப்பில் எடுக்கப்பட்டுள்ள 2-ஆவது ஒழுங்கு நடவடிக்கையாகும் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com