நினைவுச் சின்னங்கள் தேர்வு குறித்து அரசு விரிவான நடைமுறையை கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

முக்கியத்துவம் வாய்ந்த புராதன தேசியச் சின்னங்களைத் தேர்வு செய்வதில் விரிவான செயல்முறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ”தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் - உடனடியாக பாதுகாக்கப்பட வேண்டும்”  என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பிரதமருக்கான பொருளாதாரக் குழு கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. இந்தியத் தொல்லியல் துறை தேசிய அளவிலான நினைவுச் சின்னங்களை அறிவிப்பதற்கு சரியான விதிமுறைகளை கொண்டுவர வேண்டும். அந்த நினைவுச் சின்னம் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது என்பதனையும் அரசு விரிவாக குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தற்போது 3,695 நினைவுச் சின்னங்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com