அதானி குழுமத்திடம் செபி தீவிர விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

The allegations require serious investigation by those who are responsible for the stability and security of the Indian financial system, viz. the RBI and the SEBI
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்


புதுதில்லி: "இந்திய நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள், அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டுகள் மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும்" என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இந்திய நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள், அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதானி குழுமத்திடம்  தீவிர விசாரணை நடத்த வேண்டும்."

மேலும், “பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு இருக்கிறது. அதனால், கருப்புப் பணம் ஒழிப்பு குறித்து பேசும் மோடி அரசு, அதானியின் முறைகேடுகளுக்கு கண்ணை மூடிக்கொள்ள முடிவெடுத்துள்ளதா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “பொதுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), அதானி குழுமத்தில் ரூ.74,000 கோடி முதலீடு செய்துள்ளது. அரசு வங்கிகள் அதானி குழுமத்திற்கு தனியார் வங்கிகளை விட இரண்டு மடங்கு கடன் வழங்கியுள்ளன, அவற்றின் 40 சதவீத கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மட்டுமே வழங்கியுள்ளது.

இவைகளே நிதி முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகள் போதுமானதாக இருக்கும், ஆனால், மோசமான விஷயம் என்னவென்றால், எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற பொதுத்துறை வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களால் அதானி குழுமத்திற்குத் தாராளமாக முதலீடுகள், நிதியுதவிகள் அளித்துள்ளதன் மூலம் மோடி அரசு இந்தியாவின் நிதி அமைப்பை ஆபத்தான சூழலுக்குத் தள்ளியுள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றில் தங்கள் சேமிப்பை செலுத்திய கோடிக்கணக்கான மக்களை தங்களின் சேமிப்பு மீதான கவலைக்கு கொண்டு சென்றுள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியதைப் போல, அதானி குழுமம் தனது பங்குகளின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி, பின்னர் அந்த பங்குகளை அடகு வைத்து நிதி திரட்டினால், அந்த பங்கு விலைகள் வீழ்ச்சியடையும் போது எஸ்பிஐ போன்ற வங்கிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

"மோடியின் கூட்டாளிகளின் எழுச்சி சமத்துவமின்மை பிரச்னையை எப்படி அதிகப்படுத்தியது என்பதை இந்தியர்கள் அதிகம் அறிந்திருந்தாலும், அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பின் மூலம் இது எவ்வாறு அளிக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மைக்கான அபாயங்கள் ஆய்வு செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்படுமா? "ஃபோன் பேங்கிங்" பற்றிய தெளிவான வழக்குகள் இல்லையா?" 

அரசாங்கம் தணிக்கை செய்வதற்கு கூட முயற்சி செய்யலாம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

"ஆனால் இந்திய வணிகங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் உலகமயமாக்கல் சகாப்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்தும் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கைகளை வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட்டு, தீங்கிழைக்கிட்டும் என்று நிராகரித்துவிட முடியுமா?" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறிள்ளார். 

அதானி குழுமம் பங்கு முறைகேடு, வரி ஏய்ப்பு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி அதிகம் கடன் பெறுதல் உள்ளிட்ட முறை கேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டது. இந்த அறிக்கை இந்திய பங்குச்சந்தை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக இரண்டே நாள்களில் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தது. இதனால், அதில் முதலீடு செய்திருந்த எல்ஐசிக்கும் ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com