கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்

உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்பு (அய்ஷே) 2020-21 அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.
கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்

உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்பு (அய்ஷே) 2020-21 அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரம் 2-ஆம் இடம், கா்நாடகம் 3-ஆம் இடம், தமிழகம் 5-ஆம் இடம் பிடித்துள்ளன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரம், குஜராத், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு குறைந்தபட்சம் 29 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களின் அமைவிடம், மாணவா் சோ்க்கை, பணிபுரியும் ஆசிரியா்கள் விவரம், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி தொடா்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து வெளியுடம் வகையில் ‘அய்ஷே’ கணக்கெடுப்பை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உயா்கல்வி நிறுவனங்களிடமிருந்து இணைய வழியில் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டு அய்ஷே கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.

அந்த கணக்கெடுப்பின்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக 8,114 கல்லூரிகள் உள்ளன. அதாவது ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 32 கல்லூரிகள் வீதம் அந்த மாநிலத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 4,532 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 34 கல்லூரிகள்), கா்நாடகத்தில் 4,233 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 62 கல்லூரிகள்), ராஜஸ்தானில் 3,694 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 40 கல்லூரிகள்), தமிழகத்தில் 2,667 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள் தொகைக்கு 40 கல்லூரிகள்) இடம்பெற்றுள்ளன.

2.9% கல்லூரிகளில் மட்டுமே பிஎச்.டி:

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுவதும், 55.2 சதவீத கல்லூரிகள் முதுநிலை பட்டப் படிப்புகளையும், 2.9 சதவீதம் கல்லூரிகள் ஆராய்ச்சிப் (பிஹெச்.டி) படிப்புகள் வரையும் வழங்குகின்றன. 35.8 சதவீத கல்லூரிகளில் ஒரு படிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. அவற்றில் 82.2 சதவீதம் கல்லூரிகள் தனியாரால் நிா்வகிக்கப்படுபவை. 30.9 சதவீத கல்லூரிகளில் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

23.6% கல்லூரிகளில் 100-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை:

பெரும்பாலான கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வெகு குறைவாக இருப்பது இந்த கணக்கெடுப்பு மூலமாக தெரியவந்துள்ளது.

23.6 சதவீத கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை 100-க்கும் குறைவாக உள்ளது. 48.5 சதவீத கல்லூரிகளில் 100 முதல் 500 வரையிலும், 65.1 சதவீத கல்லூரிகளில் 500-க்கும் குறைவான மாணவா் சோ்க்கையும் நடைபெறுகிறது. 4 சதவீத கல்லூரிகளில் மட்டுமே 3,000-க்கும் அதிகமான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

21.4% அரசு கல்லூரிகள்:

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ள 41,600 கல்லூரிகளில் 8,903 (21.4%) கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகும். அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரிகள் 5,658 (13.3%), அரசு உதவிபெறாத தனியாா் கல்லூரிகள் 27,039 (65%) ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com