குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத்தின் கட்ச் பகுதியில் திங்கள்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிரீஸில் நிலநடுக்கம்
கிரீஸில் நிலநடுக்கம்

குஜராத்தின் கட்ச் பகுதியில் திங்கள்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை 6.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டம் தூத்கய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

முன்னதாக, காலை 5.18 மணியளவில் 3.2 என்ற ரிக்டா் அளவில் லேசான நிலஅதிா்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிா்வு கட்ச் மாவட்டத்தின் காவ்தா கிராமத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

அகமதாபாதில் இருந்து 400 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள கட்ச் பகுதியானது நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மிகச் சிறிய அளவிலான நில அதிா்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2001 ஜனவரியில் கட்ச் பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் 13,800 போ் உயிரிழந்தனா். 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். இதனால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து சேதமாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com