அதானி குழும இழப்பு ரூ. 5.5 லட்சம் கோடி! இன்று என்ன நடக்கும்?
அதானி குழும இழப்பு ரூ. 5.5 லட்சம் கோடி! இன்று என்ன நடக்கும்?

அதானி குழும இழப்பு ரூ. 5.57 லட்சம் கோடி! இன்று என்ன நடக்கும்?

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன. 

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன. 

அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மதிப்புகள் தொடர்ந்து  திங்கள்கிழமையும் பெரும் வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதைத்  தொடர்ந்து, இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் தொடர் சரிவு ஏற்பட்டு இது தற்போது 5.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதாவது, அதமானி குழும பங்குகளின் மதிப்பு ஜனவரி 24ஆம் தேதி நிறைவின்போது ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்தது. இது நேற்று வர்த்தகத்தின்போது ரூ.13.63 லட்சம் கோடியாக சரிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பங்குச் சந்தையில் வியாழன், வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய 3 வணிக நாள்களில் சந்தை மதிப்பில் 29 சதவிகிதத்தை அதானி  குழுமம் இழந்துள்ளது.

அதானி டோட்டல் கேஸ். அதானி கிரீன் டேங்க் பங்குகள் திங்கள்கிழமையன்று தலா 20 சதவிகித விலை சரிந்தன.  அதானி வில்மெர் மற்றும் அதானி பவர் ஆகியவற்றின் பங்குகள் 5 சதவிகித சரிவை சந்தித்தன. அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 15 சதவிகிதம் விலை சரிந்தன.

அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி கிரீன் பங்குகள், கடந்த ஆறு மாதங்களில் வரலாறு காணாத சரிவுடன் வர்த்தகமாகின. அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் ரூ.1.611 என்ற அளவில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவில் வர்த்தகமாகின. 

இந்த வகையில், கடந்த மூன்று நாள்கள் வணிகத்தில் அதானி குழும நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில்  5.57 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.

அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று அதானி குழுமம் அறிவித்த நிலையில், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தங்களுடைய 88 கேள்விகளில் அதானி குழுமம் 66 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலகப் பணக்காரர்களில் 8ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட கௌதம் அதானி 


இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைவதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் கௌதம் அதானியின் இடம் தொடர் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதானி குழுமப் பங்குகள் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் கடும் சரிவுடன் வணிகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், திங்கள்கிழமை வணிகத்தின் போது,  அதானியின் சொத்து மதிப்பு மேலும் 8.5 பில்லியன் டாலர்கள் சரிந்து 88.2 பில்லியன் டாலர்களாக குறைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 8ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com