
கோப்புப்படம்
அசாமில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பார்பட்டா, பிஸ்வநாத், போங்கைகான், சிராங், டர்ராங், தமாஜி, டிப்ருகார், கோலகத், கம்ரூப், மஜுடில, மோரிகான், நாகோன், நால்பரி, சிவசாகர் மற்றும் சோனிட்பூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,11259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலகாட், சிவசாகர் மற்றும் தமாஜி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவசாகரில் உள்ள டிக்கோ நதி, டிசாங் மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய நதிகள் அபாய அளவை தாண்டிய பாய்கின்றன.
படிக்க: காவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 23ல் பாஜக ஆர்ப்பாட்டம்!
மொத்தம் 91,797 விலங்குகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக சுமார் 3,653 ஹெக்டேருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் ஒன்பது மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை சேதமாகியுள்ளன. 17 மாவட்டங்களில் 32 வருவாய் வட்டங்களில் 441 கிராமங்களை வெள்ளம் பாதித்துள்ளது. மாநிலத்தில் 85 நிவாரண முகாம்களில் 3,152 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...