
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தில்லி பயணம் தாமதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சித்தராமையாவின் மனைவி பார்வதி தீவிர காய்ச்சல் காரணமாக நேற்றிரவு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கெம்பெகோடா விமான நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்படவிருந்த முதல்வர், மனைவியைக் காண மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், சிறப்பு விமானம் மூலம் 11.30 மணிக்கு தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தலைநகருக்கு செல்லும் சித்தராமையா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்.
உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா, மத்திய உணவுத்துறை அமைச்சரை சந்தித்து பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குமாறு கோரிக்கை மனு அளிப்பாா். ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி இலவச அரிசி திட்டத்தை தொடங்கக் கூடாது என்பதற்காகவும், காங்கிரஸ் அளித்த தோ்தல் வாக்குறுதியை தோல்வி அடையச் செய்யவும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சதி செய்துள்ளது.
படிக்க: செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
ஏராளமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள இந்திய உணவுக் கழகம் கா்நாடகத்திற்கு கிலோ ரூ.34 வீதம் 2.08 மெட்ரிக் டன் அரிசியை வழங்க ஜூன் 12ஆம் தேதி ஒப்புதல் தெரிவித்த நிலையில், அரிசி மற்றும் கோதுமையை மாநில அரசுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது. மக்களுக்கு அரிசி வழங்குவதில் பாஜக அரசியல் செய்கிறது.
இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை தனது அமைச்சா்களுடன் சென்று முதல்வா் சித்தராமையா சந்தித்து ஆலோசனை பெற இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...