
கர்நாடகத்தில் ஏழைகளுக்கு அரிசி வழங்கப்படுவது தொடர்பாக அரசியல் செய்யக்கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அமித்ஷாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
புது தில்லியில் உள்ள கர்நாடக பவனில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறியது,
இந்திய உணவுக் கழகத்திலிருந்து மாநிலத்திற்கு அரிசி வழங்குவது குறித்து தொடர்புடைய மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் பேசுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி இலவச அரிசி திட்டத்தை தொடங்கக் கூடாது என்பதற்காகவும், காங்கிரஸ் அளித்த தோ்தல் வாக்குறுதியை தோல்வி அடையச் செய்யவும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சதி செய்துள்ளது.
ஏராளமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள இந்திய உணவுக் கழகம் கா்நாடகத்திற்கு கிலோ ரூ.34 வீதம் 2.08 மெட்ரிக் டன் அரிசியை வழங்க ஜூன் 12ஆம் தேதி ஒப்புதல் தெரிவித்த நிலையில், அரிசி மற்றும் கோதுமையை மாநில அரசுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
படிக்க: ஆத்தூர் அருகே கணவன் வீட்டு முன்பு மனைவி தர்னா: காவல் நிலையம் முன்பு கணவன் தர்னா!
மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு அரிசி வழங்குவது தொடர்பாக அரசியல் விளையாடவோ அல்லது வெறுப்பு அரசியலோ செய்யக்கூடாது. மத்திய அரசின் கொள்கை ஏழை மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் முதல்வர் விவாதித்தார். மேலும் மத்திய அரசின் கொள்கை உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அது ஏழைகளை நேரடியாக பாதிக்கும் என்றும் அமித் ஷாவிடம் அவர் கூறினார்
இந்திய ரிசர்வ் காவல்துறையின் (ஐஆர்பி) இரண்டு பட்டாலியன்கள் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பட்டாலியன்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது என்றும் சித்தராமையா கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...