மதுபான விற்பனையில் தினமும் ரூ.115 கோடி வசூல்: எங்கு தெரியுமா?

உத்தரப்பிரதேசத்தில் நாள்தோறும் ரூ.115 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாவதாக மாநில அரசின் கலால் துறையின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 
மதுபான விற்பனையில் தினமும் ரூ.115 கோடி வசூல்: எங்கு தெரியுமா?


உத்தரப்பிரதேசத்தில் நாள்தோறும் ரூ.115 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாவதாக மாநில அரசின் கலால் துறையின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 
“மாநிலத்தில் பல மாவட்டங்களில் ஒரு நாளைக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகிறது,” என்று கலால் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.2.5 முதல் 3 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்படுகிறது.

புள்ளி விவரங்களின் படி, உத்தரப்பிரதேசத்தில் நாள்தோறும் ரூ.115 கோடி மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனையாகி வருவதாக பிரயாக்ராஜ் தலைமையிடமாகக் கொண்ட மாநில கலால் துறையின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 

பிரயாக்ராஜில், ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.4.5 கோடி மதிப்புள்ள மதுபானம் மற்றும் பீர் விற்பனையாகிறது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாளைக்கு ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு மதுபானம் மற்றும் பீர் விற்பனை ரூ.85 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுபானங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக நொய்டா மற்றும் காஜியாபாத் நாள்தோறும் ரூ.13 கோடி - ரூ14 கோடி), ஆக்ரா (ரூ.12 கோடி - ரூ.13 கோடி), மீரட் (ரூ.10 கோடி), லக்னௌ (ரூ.10 - ரூ.12 கோடி), கான்பூர் (ரூ.8 - ரூ.10 கோடி), வாரணாசி (ரூ.6 - ரூ.8 கோடி) வரை விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், "கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கிடைக்கும் மொத்த வருவாயில் நாட்டு மதுபானங்களின் பங்கு 45 சதவீதம் முதல் 50 சவீதமாக உள்ளது.” 

கலால் துறையின் புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவில் விற்பனை செய்யப்படும் பொருளாக நாட்டு மதுபானம் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளது. தவிர, பல மாவட்டங்களில் பார்களில் மதுக்கடைகள் மற்றும் பிரீமியம் மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

மாநிலத்தில் 2022-23 நிதியாண்டில் சுமார் 91,110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் 27 லட்சம் லிட்டர் சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 692 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, மது குடிப்பவர்களில் நாட்டிலேயே கர்நாடகா முதலிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017-18 இல் ரூ.17,949 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இப்போது, 2022-23 இல் ரூ.29,790 கோடி ஈட்டியுள்ளது. அதே காலகட்டத்தில், உத்தரப்பிரதேசம் மதுபான விற்பனை மூலம் வருவாயில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2017-18 இல் ரூ.17,320 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது ரூ.41,250 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில், யோகி ஆதித்யநாத் அரசு, மதுபான விற்பனை மூலம் ரூ.45,000 கோடி விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஹரியாணாவில் 2020-21 நிதியாண்டில் ரூ.6,786 கோடியாக இருந்த கலால் வருமானம் 2022-23 நிதியாண்டில் ரூ.9,687 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஹரியாணாவில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.26.53 கோடியாக உள்ளது. அதேபோல், கடந்த நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் கேரளாவுக்கு ரூ.16,100 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com