
கோப்புப் படம்.
ஜக்தல்பூரில் பலத்த காற்றுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாம் சேதமடைந்ததில் 10 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், ஜக்தல்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பல முகாம்களின் கூரைகள் நேற்று பலத்த காற்றுக்கு சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் 10 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித் அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் விரிவான மதிப்பீடு செய்யப்படவில்லை.
ஆனால் சுமார் 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...