
மகாராஷ்டிரத்தில் இந்திய நுழைவாயில் அருகேவுள்ள கடலில் குப்பையைக் கொட்டிய நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் ஆக்கப்பூர்வமாக இயங்கக்கூடியவர். அவர் இன்று பகிர்ந்திருந்த விடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர்.
அதில், இளைஞர் ஒருவர் காரில் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த குப்பைகளை இந்தியா கேட் அருகே கடலிக் கொட்டுவதைப் போன்று பதிவாகியிருந்தது. இதனை அப்பகுதியிலிருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார்.
இந்த விடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இதைப் பார்க்கவே வருத்தமாக உள்ளது. குடிமக்களின் இத்தகையத மனநிலை மாறவில்லையெனில், நகரத்தின் உள்கட்டமைப்பு எந்தவிதத்திலும் மாறப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
It hurts just to see this. No amount of improvement in physical infrastructure can improve the city’s quality of life if the civic attitude isn’t transformed. @IqbalSinghChah2 @MumbaiPolice https://t.co/Efh0ssHQ3f
— anand mahindra (@anandmahindra) November 21, 2023
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, குப்பைகளைக் கொட்டிய நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...