திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்: கார் ஓட்டுநர் வெறிச்செயல்!

திருமணம் செய்ய மறுத்ததால் அவரை கத்தியால் பலமுறை குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருமணம் செய்ய மறுத்ததால் 
ஆத்திரம்: கார் ஓட்டுநர் வெறிச்செயல்!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை பலமுறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு எடியூர் அருகே வசித்து வந்தவர் கிரீஷ்(35) பெங்களூருவில் கார் ஓட்டுநராக இருந்தார். இந்த நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த கணவரை இழந்த பரிதா கானம்(42) என்பவருக்கும் பழக்கம் எற்பட்டு, காதலாக மாறியது.

பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஸ்பா சென்டரில் பரிதா பணியாற்றி வந்தார். பரிதா கானத்திற்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் , அதில் ஒரு மகள் கல்லூரியில் படித்து வந்தார்.

திருமணம் செய்ய மறுத்ததால் 
ஆத்திரம்: கார் ஓட்டுநர் வெறிச்செயல்!
என்ன செய்யப்போகிறார் அரவிந்த் கேஜரிவால்?

இந்த நிலையில், கிரீஷ் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பரிதாவிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு பரிதா கான் தனக்கு 2 பிள்ளைகள் உள்ளதால் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிரீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரிதா கானத்தை சரமாரியாக பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

அதன்பின்னர், கிரீஷ் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். போலீஸார் விசாரணையில், பரிதா தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவரை கத்தியால் பலமுறை குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் கிரீஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com