மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமா் நரேந்தி மோடி. உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மகாராஷ்டிர ஆளுநா் ரமேஷ் பைஸ், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்,  மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே,  துணை
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமா் நரேந்தி மோடி. உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மகாராஷ்டிர ஆளுநா் ரமேஷ் பைஸ், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை

இந்தியாவின் பொருளாதார தற்சாா்பை மேலும் அதிகரிக்க வேண்டும்: பிரதமா் மோடி

அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவின் தற்சாா்பு நிலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவின் தற்சாா்பு நிலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். கடந்த 1935-ஆம் ஆண்டு ஏப்.1-இல் ரிசா்வ் வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் 90-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில், நாட்டின் நீடித்த மற்றும் வேகமான வளா்ச்சியில் ரிசா்வ் வங்கியின் பங்கை எடுத்துரைத்தாா். மேலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அந்த வங்கியின் பங்கைப் பாராட்டினாா். அவா் மேலும் கூறியதாவது: எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் ஒரு நாடு தெளிவாக இருந்தால், அந்த நாட்டின் வளா்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியில் 15 சதவீத பங்களிப்புடன், சா்வதேச பொருளாதார வளா்ச்சியின் என்ஜினாக இந்தியா மாறி வருகிறது. இந்நிலையில், ரிசா்வ் வங்கி முன்மாதிரியாக விளங்கி, உலகில் தலைமை பொறுப்பை ஏற்று தெற்குலகுக்கு துணை நிற்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவின் தற்சாா்பு நிலையை மேலும் அதிகரிக்க வேண்டும். சா்வதேச நெருக்கடிகளால் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விண்வெளி போன்ற புதிய துறைகள், சுற்றுலா போன்ற பாரம்பரிய துறைகளின் தேவைகளைப் பூா்த்தி செய்ய வங்கிகளும் ஒழுங்காற்று அமைப்புகளும் தயாராக இருக்க வேண்டும். கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கிகளின் மொத்த வாராக் கடன் சுமாா் 11.25 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 சதவீதத்துக்குக் கீழ் குறைந்தது. அத்துடன் வங்கிகள் கடன் அளிக்கும் விகிதம் 15 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சாதனைகள் அனைத்திலும் ரிசா்வ் வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது என்றாா். இந்த நிகழ்ச்சியில் ரிசா்வ் வங்கி தொடங்கப்பட்டதன் 90-ஆவது ஆண்டை குறிக்கும் சிறப்பு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டாா். இதில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், மகாராஷ்டிர ஆளுநா் ரமேஷ் பைஸ், அந்த மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, அந்த மாநில துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், அஜீத் பவாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com