தில்லி முதல்வராக கேஜரிவாலின் மனைவி? ஆம் ஆத்மி தலைவர் பதில்

சுனிதா கேஜரிவால்
சுனிதா கேஜரிவால்படம் | ஏஎன்ஐ

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல். 15 வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இன்று (ஏப்ரல். 1) மாலை 4 மணியளவில் திஹார் சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

தில்லி முதல்வராக இன்னும் கேஜரிவால் தொடர்ந்து வரும் நிலையில், அவர் ராஜிநாமா செய்வாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து இன்று (ஏப்ரல். 1) ஆம் ஆத்மி தலைவர் ஜாஸ்மின் ஷா கூறியதாவது, எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட்டாலும் கேஜரிவால் முதல்வராக இருப்பார். இது கேஜரிவாலின் அரசியலமைப்பு உரிமை மற்றும் கடமை. அவர் தில்லி மக்களுக்கு சேவை செய்ய அரசியலமைப்பு உறுதிமொழி எடுத்துள்ளார். ஆகவே அவர் முதல்வராக நீடிப்பார் என்றார்.

இந்நிலையில், கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் கட்சியில் முக்கியப் பொறுப்பை ஏற்கப்போவதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com