தோ்தல் பணியை ஏற்காத ஆசிரியைக்கு வாரண்ட்!

குஜராத் மாநிலத்தில் தோ்தல் பணியை ஏற்காத அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியைக்கு எதிராக வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் தோ்தல் பணியை ஏற்காத அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியைக்கு எதிராக வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அகமதாபாத் நகருக்கு உள்பட்ட சென்பூா் ஆரம்பப் பள்ளி ஆசிரியை ஹினல் பிரஜாபதிக்கு வாக்குச் சாவடி அதிகாரிப் பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவா் அந்தப் பொறுப்பை ஏற்க வரவில்லை. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நேரில் வந்து விளக்கமளிக்க வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவரைப் பிடித்து வர போலீஸாா் அனுப்பப்பட்டனா். தனது வீட்டிலிருந்து வாக்குச் சாவடி மிகத் தொலைவில் இருப்பதால் தோ்தல் பணியைத் தான் ஏற்கவில்லை என்று ஹினல் விளக்கமளித்தாா். அவரது உண்மை நிலையை அறிந்த தோ்தல் அதிகாரியான மாவட்ட துணை ஆட்சியா் அவரின் வீட்டுக்கு அருகே அமைந்த வாக்குச் சாவடி ஒன்றில் பணியாற்ற புதிய உத்தரவு பிறப்பித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com