ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் ஒடிஸாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒடிஸாவில் முதற்கட்ட வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே, ஓரணியில் இருந்த பாஜகவும் பிஜு ஜனதா தளமும் இம்முறை தனித்தனியாக போட்டியிடுகின்றன.

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதற்கட்டமாக, 112 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக தலைமை இன்று(ஏப். 2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நேரடியாக ஒடிஸாவில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com