மரணத்தில் சந்தேகம்: தோண்டி எடுக்கப்பட்ட சிறுவனின் உடல்

தாய் கொடுத்த புகாரின்படி சிறுவனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரிக்க உள்ளனர்.
மரணத்தில் சந்தேகம்: தோண்டி எடுக்கப்பட்ட சிறுவனின் உடல்

மகாராஷ்டிர மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின்படி சிறுவனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரிக்க உள்ளனர்.

ஜல்னாவின் மாலேகான் கிராமத்தில் தந்தையுடன் வசித்து வந்தவர் அரியன் பட்சோட்(11). தாய் சிந்துபாய். தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில், புல்தானா மாவட்டத்தில் தனித்தனியாக வசித்து வந்தார்.

சமீபத்தில் மகன் அரியனை தந்தை மலேகானுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விபத்து ஏற்பட்டதாகவும், அதில் மகன் இறந்துவிட்டதாகவும் கூறி தாய் சிந்துபாய்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மரணத்தில் சந்தேகம்: தோண்டி எடுக்கப்பட்ட சிறுவனின் உடல்
சிறையில் முதல் நாள்: உறக்கமின்றி தவித்த கேஜரிவால்!

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் அவசர அவசரமாக மகனின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர்.

இதையடுத்து, மகனின் மரணத்தில் தனது கணவரான ராவ்சாகேப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், இறுதிச் சடங்குகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார் காவல் நிலையில் புகார் அளித்தார்.

தாய் அளித்த புகாரையடுத்து சிறுவனின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com