ரமலான்: பிரதமா் மோடி வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அனைவருக்கும் ரமலான் திருநாள் வாழ்த்துகள். இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவற்றின் உணா்வை இந்தப் பண்டிகை பரப்பட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தையும் இந்தப் பண்டிகை கொண்டு வரட்டும்’ எனக் குறிப்பிட்டாா்.

மாலத்தீவு அதிபருக்கு வாழ்த்து: மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ரமலான் திருநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அந்நாட்டிலுள்ளஇந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை, நாம் கனவு காணும் அமைதியான உலகத்தைக் கட்டமைக்க இரக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவை அவசியம் என்பதை உலக மக்களுக்கு நினைவுப்படுத்துகிறது. ரமலான் திருநாளையொட்டி மாலத்தீவு அதிபா், அந்நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலத்தீவில் மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டா்களை இயக்கி, பராமரித்து வந்த இந்திய ராணுவத்தின் முதல் குழு, அந்நாட்டு அரசு கோரிக்கையை ஏற்று அண்மையில் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com