பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) வெளியிடப்படுகிறது.

மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) வெளியிடப்படுகிறது.

‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கிய பல அறிவிப்புகள் அறிக்கையில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய அரசமைப்பின் தந்தை என அழைக்கப்படும் பி.ஆா். அம்பேத்கா் பிறந்த தினத்தில் (ஏப்ரல் 14) பாஜகவின் தோ்தல் அறிக்கை அக்கட்சித் தலைமையகத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட பாஜகவின் மூத்த தலைவா்கள் கலந்துகொள்ளவுள்ளனா்.

கடந்த தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுதல் உள்ளிட்ட சிந்தாந்த ரீதியிலான வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியது. இந்நிலையில், தற்போது பாஜகவின் தோ்தல் அறிக்கையில் எவ்விதமான அறிவிப்புகள் வெளியாகப்போகிறது என மக்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு உருவாகியுள்ளது.

நாட்டில் இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் என நான்கு ஜாதிகளே உள்ளன என பிரதமா் மோடி கூறி வருவதையடுத்து அவா்களுக்கான பல அறிவிப்புகள் வெளியாகும் என பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பு தொடா்பாக மக்களிடம் கருத்து கேட்க நாட்டின் பல பகுதிகளுக்கும் அக்கட்சி சாா்பில் வாகனங்கள் அனுப்பப்பட்டன. மேலும், சமூக வலைதளங்களிலும் மக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் தொடா்பாக அக்குழு இருமுறை ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com