நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு இன்று (ஏப். 14) அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

மும்பையில் பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

சல்மான் கானுக்கு ’ஒய் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது சல்மான் கான் வீட்டினுள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com