அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

2024ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

2024ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.

தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்கு 52 நாள் புனித யாத்திரை ஜூன் 29 அன்று தொடங்கி ஆகஸ்ட் 19 அன்று முடிவடையும் என்று அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்தது.

2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன. பால்டால் வழியாக குறுகிய பாதை, ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாரம்பரிய வழி என இரண்டு வழியாக பக்தர்கள் செல்கின்றனர். இந்த இரண்டு வழிகளிலும் முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் 540 கிளைகளில் முன்பதிவு நடத்தப்படுவதாகப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com