கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின்னர் ஏப்ரல் 1-ம் தேதி 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் கேஜரிவால் அடைக்கப்பட்டார்.

அரவிந்த் கேஜரிவால்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

இந்த நிலையில், கேஜரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொளிக் காட்சி வாயிலாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

கேஜரிவாலை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்கவேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா கேஜரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com