தனியார் துறைக்கு எதிரானது காங்கிரஸ் -பிரதமர் மோடி விமர்சனம்

தனியார் துறைக்கு எதிரானது காங்கிரஸ் -பிரதமர் மோடி விமர்சனம்
படம் | பிடிஐ

பெங்களூரில் கடந்த மார்ச் மாதம் தண்ணீர் பஞ்சம் கடுமையாக வாட்டி வதைத்து. இதையடுத்து மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டது. அது மட்டுமன்றி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளில் மக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சிகளும் அரங்கேறின.

இந்த நிலையில், பெங்களூரு மாநகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அங்கு ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் பிரதமர் மோடி.

கர்நாடகத்தில் ஏப்ரல்-26, மே-7 ஆகிய நாள்களில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பெங்களூரில் இன்று (ஏப். 20) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “டெக் சிட்டியை, டேங்கர் சிட்டியாக மாற்றியுள்ளது காங்கிரஸ். தண்ணீர் தேங்கர் லாரி கும்பலிடம் இந்நகரத்தை விட்டுள்ளது.

தனியார் துறைக்கு எதிரானது காங்கிரஸ் -பிரதமர் மோடி விமர்சனம்
அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கும்m வரி செலுத்துவோருக்கும் எதிரானது. தனியார் துறைக்கு எதிரானதாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கவனம் மோடியின் மீது உள்ளது. ஆனால் என் கவனமோ நாட்டின் வளர்ச்சியின் மீதே இருந்து வருகிறது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com