’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்
படம், | பிடிஐ

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று(ஏப். 21) எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் பேசினார்.

சுனிதா கேஜரிவால் பேசியதாவது, “அரவிந்த் கேஜரிவாலுக்கு அதிகாரத்தின் மீது ஆசையில்லை. தேசத்துக்காக சேவையாற்றுவதே அவருடைய விருப்பம். நம் நாட்டை நம்பர் 1 இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார். ஆனால் இது சாத்தியமற்ற விஷயம் என பலரும் சொல்கின்றனர்.

அரசியல் என்பது அழுக்கு நிறைந்தது. ஜேஜரிவாலின் உணவில் கூட கேமரா வைத்து கண்காணிக்கின்றனர். அவர் ஒரு சர்க்கரை நோயாளி. கடந்த 12 ஆண்டுகளாக, தினசரி 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருபவர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை. இதன்மூலம், தில்லி முதல்வரை கொல்ல முயற்சி நடக்கிறது.

கேஜரிவாலின் எண்ணங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கேஜரிவால் ஒரு சிங்கம். சிறையிலிருந்து கொண்டும் பாரத் மாதவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com