நெட் 2024 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நெட் 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே.10 கடைசி நாள்!
நெட் 2024 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய தேர்வு முகமை(என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவரும் பல்கலைக்கழக மானியக் குழுவின்(யூஜிஸி) நெட் தேர்வுக்கு ஆன்லைனில் இன்று(ஏப்.21) முதல் விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே.10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

Attachment
PDF
public-notice-for-opening-of-online-application-ugc-net-june-2024.pdf
Preview

நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்துமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜூன் 16-ஆம் தேதி நெட் தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம், பொதுப்பிரிவினருக்கு ரூ. 1,150, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய பிரிவினருக்கு ரூ. 325 தேர்வுக் கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு 011 - 40759000 / 011 - 69227700 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com