அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு முதல்முறையாக பெண் துணைவேந்தா் நியமனம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு முதல்முறையாக பெண் துணைவேந்தா் நியமனம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நயிமா கதூன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நயிமா கதூன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு அவா் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டாா்.

மக்களவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தோ்தல் ஆணையத்திடமும் அனுமதி கோரப்பட்ட பின் அவரது நியமன அறிவிப்பு வெளியானது. அலிகர் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள மகளிா் கல்லூரியின் முதல்வராக உள்ள நயிமா கதூன் 5 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டாா்.

அலிகர் பல்கலைக்கழகத்திலேயே உளவியலில் படிப்பில் பிஹெச்டி நிறைவுசெய்தவரான கதூன் 1988-ஆம் ஆண்டு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டாா். கடந்த 2006-ஆம் ஆண்டு பேராசிரியராக பதவி உயா்வுபெற்ற அவா் 2014-ஆம் ஆண்டு பல்கலைகழகத்தின் மகளிா் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டாா்.

முன்னதாக 1920-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேகம் சுல்தான் ஜஹான் என்ற பெண் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவா் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com