கே.எஸ். ஈஸ்வரப்பா(உள்படம்)
கே.எஸ். ஈஸ்வரப்பா(உள்படம்)

கர்நாடக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!

கர்நாடகம்: பாஜக மூத்த தலைவர் கட்சியிலிருந்து நீக்கம் -கட்சிக்கு எதிராக செயல்படுவதாக புகார்

கர்நாடகத்தில் ஏப்ரல்-26, மே-7 ஆகிய நாள்களில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று(22). இந்த நிலையில், ஷிவ்மோகா மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக அதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா(75), வேட்புமனுவை திரும்பப் பெறாதால் அவர் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

அவர் கட்சியின் விதிகளை மீறி நடந்துள்ளதாகவும், சுயேச்சை வேட்பாளராக மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

தன் மகன் கே.ஈ. கந்தேஷ்க்கு ஹாவேரி தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு, கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திராவும் அவரது தந்தையும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சியின் அறிவிப்பை மீறி, ஷிவ்மோகா மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக அதே தொகுதியில் ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிடுவதால், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com