ஆந்திரம்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.
Congress
Congress

ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.

மாநிலத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 38 வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 10 தொகுதியில் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், ஏற்கனவே 114 பேரை அறிவித்திருந்த நிலையில், இதுவரை 142 பேரை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

முலாம் ரெட்டி துருவரெட்டி, முதல்வர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து புலிவெந்துலா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

கடப்பா மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள தொகுதிகளில் புலிவெந்துலாவும் ஒன்று, அங்கு முதல்வர் ரெட்டியின் சகோதரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி தனது உறவினரும், ஒய்எஸ்ஆர் வேட்பாளருமான அவினாஷ் ரெட்டியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com