திகார் சிறைக் கண்காணிப்பாளருக்கு கேஜரிவால் கடிதம்!

திகார் சிறைக் கண்காணிப்பாளருக்கு கேஜரிவால் கடிதம்!

கேஜரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கேஜரிவால் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சர்க்கரையின் அளவு பகலில் 250 முதல் 300 வரை அதிகரித்துவரும் நிலையில் தினமும் இன்சுலின் தேவைப்படுகின்றது. ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற பொய்யான அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்.

அரசின் அழுத்தங்களால் திகார் நிர்வாகத்தின் அறிக்கைகள் தவறானவை. மேலும், தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், கவலைப்படும்படியாக எதுவும் இல்லை எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த அறிக்கையை கேஜரிவால் நிராகரித்துள்ளார். தனது உடல்நலப் பிரச்னைகளின் வரலாறு குறித்த விவரங்களை தமது மருத்துவர்கள் வழங்குவார்கள் என்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திகார் சிறையில் முதல்வர் கேஜரிவாலை மெல்ல மரணமடைவதற்கான சதித்திட்டம் நடைபெறுவதாக ஆம் ஆத்மி வட்டாரங்களும், முதல்வரின் மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, திகார் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 20 அன்று காணொளி வாயிலாக எய்ம்ஸின் மூத்த மருத்துவ நிபுணர்கள் கேஜரிவாலுக்கு ஆலோசனை வழங்கினர்.

40 நிமிட ஆலோசனைக்குப் பிறகு கேஜரிவாலுக்கு தீவிர பிரச்னை எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தொடர கேஜரிவாலுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com