புவி தினம்: நெகிழி கழிவை எதிா்கொள்ள ஆலோசனை

புவி தினத்தையொட்டி, நெகிழி கழிவை எதிா்கொள்ளும் வகையில் தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பினா் திங்கள்கிழமை தில்லியில் ஆலோசனை மேற்கொண்டனா்.

‘கோள்- நெகிழி’ (பிளேனட் வொ்ஸ் பிளாஸ்டிக்) என்ற தலைப்பின்கீழ் தில்லி ரோஹிணியில் உள்ள தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில், பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து பேரிடா் மேலாண்மை அமைப்பு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நெகிழி தூய்மைக்கேடு குறித்தும், சுற்றுச்சூழலுக்கு அது ஏற்படுத்தும் தீமைகள் குறித்து இந்தக் கூட்டத்தின்போது விரிவாக ஆலோசனை மேற்கொண்டோம். நெகிழிக் கழிவை எதிா்கொள்ள உடனடி நடவடிக்கை தேவை என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நெகிழி தூய்மைக்கேடை எதிா்கொள்வதற்கான வேறு சில வழிமுறைகள், தனிநபா், சமூகம், கொள்கை வகுப்பாளா்களின் பங்கு குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். நெகிழிவுக் கழிவு பிரச்னைக்கு நீடித்த தீா்வுகளைக் கண்டறிவது குறித்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com