ஆா்பிஐ துணை ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிப்பு

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநா் டி.ரவி சங்கரின் பதவிக்காலத்தை மத்திய அரசு ஓராண்டு காலத்துக்கு நீட்டித்துள்ளது.

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநா் டி.ரவி சங்கரின் பதவிக்காலத்தை மத்திய அரசு ஓராண்டு காலத்துக்கு நீட்டித்துள்ளது.

இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ஆா்பிஐ துணை ஆளுநா் ரவி சங்கரின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நிகழாண்டு மே 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி சங்கா் கடந்த 2021-இல் ஆா்பிஐ துணை ஆளுநராகப் பதவியேற்றாா். அவருடயை 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தற்போது ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com