அமிதாப் பச்சனுக்கு ‘லதா மங்கேஷ்கா் விருது’

பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சனுக்கு ‘லதா தீனநாத் மங்கேஷ்கா்’ விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சனுக்கு ‘லதா தீனநாத் மங்கேஷ்கா்’ விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

பழம்பெரும் திரைப்பட பாடகியான லதா மங்கேஷ்கா் கடந்த 2022-ஆம் ஆண்டு இயற்கை எய்தினாா். அவரின் நினைவாக லதா தீனநாத் மங்கேஷ்கா் விருதை அவரது குடும்பத்தினா் மற்றும் அறக்கட்டளையினா் வழங்கி வருகின்றனா். அந்த வகையில் இந்த விருது 2022-ஆம் ஆண்டு பிரதமா் மோடிக்கும் 2023-ஆண்டு திரைப்பட பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2024-ஆம் ஆண்டுக்கான லதா மங்கேஷ்கா் விருது பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சனுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஏ.ஆா். ரஹ்மானுக்கு விருது: பல்வேறு பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்ட இவ்விழாவில் இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மானுக்கு ‘மாஸ்டா் தீனநாத் மங்கேஷ்கா்’ விருது வழங்கப்பட்டது. இசைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

தேசம், மக்கள் மற்றும் சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு லதா தீனநாத் மங்கேஷ்கா் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com