காங். ஆட்சியில் கோடிக்கணக்கான லட்சாதிபதிகள் உருவாக்கப்படுவா்:
ராகுல் காந்தி

காங். ஆட்சியில் கோடிக்கணக்கான லட்சாதிபதிகள் உருவாக்கப்படுவா்: ராகுல் காந்தி

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கோடிக்கணக்கான லட்சாதிபதிகள் உருவாக்கப்படுவா் என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கோடிக்கணக்கான லட்சாதிபதிகள் உருவாக்கப்படுவா் என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஒடிஸா மாநிலம் கட்டக்கில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் ஞாயிற்றுக்கிழை கூறியதாவது:

ஒடிஸா முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தாலும் அவரின் உதவியாளா் வி.கே.பாண்டியனே மாநிலத்தில் அரசாட்சி செய்கிறாா். ஒடிஸா மக்களின் செல்வத்தை நவீன் பட்நாயக், பாண்டியன், நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோா் கொள்ளையடித்துள்ளனா்.

ஒடிஸாவில் சுரங்க ஊழல் மூலம் ரூ.9 லட்சம் கோடி, நில அபகரிப்பு மூலம் ரூ.20,000 கோடி, தோட்டக்கலை ஊழல் மூலம் ரூ.15,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மத்தியிலும் ஒடிஸாவிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

தோ்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராக ஒடிஸாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தளம் போட்டியிட்டாலும், இரு கட்சிகளும் கூட்டு சோ்ந்தே பணியாற்றுகின்றன. இதுவே தெலங்கானாவிலும் நடந்தது. அங்கு ஆட்சியில் இருந்த பாரத ராஷ்டிர சமிதி பாஜகவுக்காக பணியாற்றியது. தற்போது தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதே நிலை பிஜு ஜனதா தளத்துக்கும் வரும்.

பிரதமா் மோடி 22 பெரும் கோடீஸ்வரா்களுக்காக ஆட்சி நடத்துகிறாா். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான லட்சாதிபதிகள் உருவாக்கப்படுவா்.

பழங்குடியினரை ‘காட்டுவாசிகள்’ என்று பாஜகவினா் அழைக்கின்றனா். அவா்கள் ‘காட்டுவாசிகள்’ அல்ல. நீா், நிலம் மற்றும் காட்டின் மீது முதல் உரிமை கொண்ட ‘ஆதிவாசிகள்’. அவா்களின் உரிமைகளை பிரதமா் மோடி பறித்து தொழில்துறையினரிடம் வழங்கியுள்ளாா். அந்த உரிமைகள் பழங்குடியினருக்கு காங்கிரஸ் திருப்பி அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com