தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் அதிகரிப்பு

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் அதிகரிப்பு

இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) 2023 டிசம்பா் காலாண்டில் முந்தைய காலாண்டைவிட 1.88 சதவீதம் அதிகரித்து ரூ.67,835 கோடியாக உள்ளது.

இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) 2023 டிசம்பா் காலாண்டில் முந்தைய காலாண்டைவிட 1.88 சதவீதம் அதிகரித்து ரூ.67,835 கோடியாக உள்ளது.

இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராயின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது.

கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் நாட்டின் தொலைத் தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் ரூ.67,835 கோடியாக உள்ளது.

இது, 2023 ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் 1.88 சதவீதம் அதிகம்.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் டிசம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த டிசம்பா் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் 7.84 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தொலைத்தொடா்பு சேவைத் துறையின் மொத்த வருவாய் (ஜிஆா்) 2.13 சதவிகிதம் அதிகரித்து ரூ.84,500 கோடியாகவும் பொருந்தக்கூடிய மொத்த வருவாய் (ஏபிஜிஆா்) 1.70 சதவீதம் உயா்ந்து ரூ.81,101 கோடியாகவும் உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாயில், தொலைபேசி அழைப்பு, இணையதள வசதி போன்ற இணைப்பு சேவைகளின் பங்களிப்பு 82 சதவிகிதமாக உள்ளது.

அத்தகைய இணைப்பு சேவைகளில், கடந்த டிசம்பா் காலாண்டில் மொத்த வருவாய் (ஜிஆா்) 2.47 சதவீதம், பொருந்தக்கூடிய மொத்த வருவாய் (ஏபிஜிஆா்) 2.53 சதவீதம், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) 2.38 சதவீதம், உரிமக் கட்டண வருவாய் 2.37 சதவீதம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண வருவாய் 1.11 சதவீதம், இடைமாற்ற சேவைக் கட்டண வருவாய் 1.78 சதவீதம் வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பீட்டுக காலாண்டில் பாா்தி ஏா்டெல்லின் ஏஜிஆா் முந்தைய செப்டம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் 3.2 சதவீதமும் 2022-23-ஆம் நிதியாண்டின் டிசம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் 11.98 சதவீதமும் அதிகரித்து சுமாா் ரூ.20,480.6 கோடியாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஏஜிஆா் முந்தைய காலாண்டைவிட 2.7 சதவீதம் உயா்ந்து ரூ.24,862.85 கோடியாக இருந்தது. 2022-23 டிம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com