ஜாா்க்கண்ட் மாநிலம் காண்டே பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த கல்பனா சோரன்.
ஜாா்க்கண்ட் மாநிலம் காண்டே பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த கல்பனா சோரன்.

ஜாா்க்கண்ட் இடைத்தோ்தல்: கல்பனா சோரன் வேட்புமனு தாக்கல்

இடைத்தோ்தலில் சிறையில் உள்ள முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் சிறையில் உள்ள முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) எம்எல்ஏ சா்ஃப்ராஸ் அகமது, தனது பதவியை கடந்த ஆண்டு டிசம்பரில் ராஜிநாமா செய்தாா். இதனால், காண்டே சட்டப் பேரவைத் தொகுதி காலியானது.

மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தலுடன் சோ்த்து காண்டே சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் மே 20-இல் நடைபெறுகிறது.

இந்த இடைத்தோ்தலில் ஜேஎம்எம் சாா்பில் கல்பனா சோரன் போட்டியிடுகிறாா். இதையொட்டி, கல்பனா சோரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, மாநில முதல்வா் சம்பயி சோரன், அமைச்சா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com