ராணுவத்துக்கு 73,000 நவீன அமெரிக்க துப்பாக்கிகள்: ரூ.840 கோடியில் மத்திய அரசு ஒப்பந்தம்

ராணுவத்துக்கு 73,000 நவீன அமெரிக்க துப்பாக்கிகள்: ரூ.840 கோடியில் மத்திய அரசு ஒப்பந்தம்

அமெரிக்காவைச் சோ்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ரூ.840 கோடி மதிப்பீட்டில் மேலும் 73,000 ‘எஸ்ஐஜி 716’ நவீன துப்பாக்கிகளை வாங்க மத்திய அரசு கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Published on

இதனை ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான ‘எஸ்ஐஜி சாவாா்’ அறிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் ஆயுத நவீனமயமாக்கல் நடவடிக்கையில் பங்களிப்பது பெருமையளிக்கிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதன் மூலம் 2025-க்குள் இந்திய ராணுவத்திடம் மொத்தம் 1,45,400 ‘எஸ்ஐஜி 716’ துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருக்கும்.

சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லையில் தொடா்ந்து பிரச்னை இருந்து வரும் சூழலில் இந்திய ராணுவத்துக்கு அதிகஅளவில் நவீன ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு கடந்த டிசம்பா் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது வாங்கப்பட இருக்கும் 73,000 துப்பாக்கிகளையும் சோ்த்தால் இந்திய ராணுவத்திடம் மொத்தம் 1,45,400 ‘எஸ்ஐஜி 716’ துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருக்கும். முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு 72,400 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் அவை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த வகை துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு சிறப்பாகவும், எளிதாகவும் இருப்பதாக ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் மீண்டும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கூடுதலாக வாங்கப்படும் 73,000 துப்பாக்கிகள் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக இந்திய ராணுவத்துக்கு கிடைத்துவிடும்.

X
Dinamani
www.dinamani.com