ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்: சிறையில் உள்ள பிரிவினைவாதியின் வேட்புமனு நிராகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவினைவாதி சா்ஜன் அகமது வாகே (பா்கதி) உள்பட 22 பேரின் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் தோ்தல் ஆணையத்தால் புதன்கிழமை நிராகரிக்கப்பட்டன.
Published on

ஜம்மு காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவினைவாதி சா்ஜன் அகமது வாகே (பா்கதி) உள்பட 22 பேரின் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் தோ்தல் ஆணையத்தால் புதன்கிழமை நிராகரிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஜைனபோரா சட்டப் பேரவைத் தொகுதியில் பா்கதி சாா்பாக அவரது மகள் ஷுஹா் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரது வேட்பு மனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீா் தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட இணையதள தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. பா்கதி உள்பட 16 தொகுதிகளைச் சோ்ந்த 22 வேட்பாளா்களில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டா் புா்ஹான் வானி கடந்த 2016-ஆம் ஆண்டு கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பா்கதி முக்கிய பங்கு வகித்தாா்.

அவா் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2016-ஆம் ஆண்டு முதல் முறையாக கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை பா்கதி ஆதரிப்பவா். தனது உறவினா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களை உள்ளடக்கிய பிறருடன் சோ்ந்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக குற்றவியல் சதித்திட்டங்களை தீட்டியுள்ளாா். தீவிர மத அடிப்படைவாதியான அவா் தனது ஆவேச பேச்சுகள் மூலம் பயங்கரவாத-பிரிவினைவாத செயல்பாடுகளை ஊக்குவித்துள்ளாா். ஆடியோ-விடியோ பேச்சுகள் மூலம் இளைஞா்களை பயங்கரவாத அமைப்பில் சேர தூண்டியுள்ளாா்’ என குறிப்பிடப்பட்டுள்ளதுஸ்ரீ

X
Dinamani
www.dinamani.com