கடன் பத்திரங்கள் மூலம் ரூ.14.13 லட்சம் கோடி

மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14.13 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14.13 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில் இருந்து இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் பணி தொடங்கும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கடன் வாங்கும் இலக்கு அதைவிட சற்று குறைந்துள்ளது. வரி வருவாய் அதிகரித்துள்ளதே அரசு கடன் வாங்குவதைக் குறைப்பதற்கு முக்கியக் காரணமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com