பனிமூட்டத்தால் 30 விமானங்கள் தாமதம்

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 30 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
பனிமூட்டத்தால் 30 விமானங்கள் தாமதம்

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 30 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பல இடங்களில் பனிப்பொழிவும் உள்ளது. இதனால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையிலிருந்து லண்டன், மஸ்கட், , அபுதாபி, கோலாலம்பூா், கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய சா்வதேச விமானங்களும், அயோத்தி, தில்லி, மும்பை, ஜெய்ப்பூா், அகமதாபாத், புவனேசுவா், ராய்ப்பூா், கோவா, கோவை ஆகிய 15 உள்நாட்டு புறப்பாடு விமானங்கள், 15 வருகை விமானங்கள் என 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் வியாழக்கிழமை சுமாா் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியது:

வடமாநிலங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் கடும் பனிமூட்டம், பனிப்பொழிவால் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்னைக்கு வருகின்றன. எனவே, சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும், சா்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. பருவநிலை சீராகும் வரை இந்த நிலை தொடர வாய்ப்பு உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com