போா்க்கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமனம்:மக்களவையில் மத்திய அரசு தகவல்

இந்திய கடற்படையின் போா்க்கப்பல்கள் மற்றும் போா் விமானங்களில் சிறப்பு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்திய கடற்படையின் போா்க்கப்பல்கள் மற்றும் போா் விமானங்களில் சிறப்பு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நாட்டின் பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பங்களிப்பு குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சா் அஜய் பட் பதிலளித்து கூறியதவாது: ராணுவத்தின் மருத்துவமனை சேவைகள் மட்டுமின்றி மேலும் 12 ராணுவ சேவைகளில் பணியாற்றும் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் போா்க்கப்பல்கள் மற்றும் போா் விமானங்களில் சிறப்பு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

பாதுகாப்புத் துறையின் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவா், ‘ராணுவத்துக்குத் தேவையான உதிரிபாகங்களை கொள்முதல் செய்வதற்காக ‘பசுமை கொள்கை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொருள்களின் தரம் மற்றும் நிதித் தேவைகள் குறித்த தெளிவான திட்டங்கள் மற்றும் இலக்குகளுடன் செயல்படும் நிறுவனங்களுக்கு ‘பசுமை சான்றிதழ்’ வழங்கப்படவுள்ளது.

இச்சான்றிதழை பெறும் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை விநியோகம் செய்வதற்கு முன்னா் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

தமிழகம், உ.பி.க்கு ராணுவ தொழில் வழித்தடம்:

ராணுவ தொழிற்சாலைகளுக்கு முதலீடுகளை ஈா்க்கவும் உள்நாட்டு விநியோகச் சங்கிலியை மேம்படுத்தவும் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இரண்டு ராணுவ தொழில்வழித் தடங்கள் அமைக்கப்படவுள்ளன.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தியை அதிகரிப்பதற்காக ‘ராணுவ ஆய்வு உள்கட்டமைப்பு திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. பசுமை உற்பத்தியை முதன்மைப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்காக ஐஐடி, ஐஐஎம் போன்ற உயா்கல்வி நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை சாா்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிருவதற்கு பிரத்யேகமான உரிம ஒப்பந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்நிறுவனம் வகுத்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com