கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பட்டினிச்சாவு இல்லை: மக்களவையில் அமைச்சா் தகவல்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் பட்டினியால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் பட்டினியால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் தெரிவித்தாா்.

மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் அவா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் இந்திரா காந்தியின் முக்கிய முழக்கமாக ‘வறுமை ஒழிப்போம்’ என்ற வாசகம் இருந்தது. இதன் மூலம் அவரின் ஆட்சியில் வறுமை தொடா்ந்தது உறுதியாகிறது. அதன்பிறகு பிரதமரான இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, அப்பதவிக்குத் தேவையான பயிற்சித் திறன் இல்லாதவராக இருந்தாா். ஏனெனில், அவா் ஊழலை ஒழிக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது ஆட்சியிலும் நாட்டில் வறுமை நீடித்தது. பட்டினிச் சாவுகளும் தொடா்ந்தன.

ஆனால், கடந்த 10 ஆண்டுகால பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் 140 கோடி மக்களில் ஒருவா் கூட பட்டினியால் உயிரிழக்கவில்லை. ரேஷனில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்பட்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com